கட்டுக்கொடி (மூலிகை வயாகரா)

கட்டுக்கொடி ( மூலிகை வயாகரா )

 
 
கட்டுக்கொடி botanical name Cocculus hirsutus

கட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம். முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும், மானாவாரி, விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது. இதில் சிறு கட்டுக்கொடி, பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டு. இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றேஒரே கட்டிலிருந்து பல கொடிகள் உண்டாகும். மண்ணில் பதிந்தால் வேர் விட்டு இன விருத்தியாகும். விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும். கிராமங்களில் எளிதில் கிடைக்க கூடியது கட்டுக்கொடி. இதன் கொடி பார்ப்பதற்கு கயிறு மாதிரி இருக்கும். நீண்டு வளர்ந்து இருக்கும். இதன் இலை நாக்கு வடிவத்தில் காணப்படும். பனை மரம், ஈச்ச மரத்தின் மீது கட்டுக்கொடி படர்ந்து காணப்படும்.

 1. இது குளிர்ச்சியுண்டாக்கியாகவும் உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் செயற்படும்.

 2. பாக்களவு இலையை மென்று தின்ன இரத்த பேதி, சீதபேதி, மூலக்கடுப்பு எரிச்சல் தீரும்.

 3. கட்டுக்கொடி இலை, வேப்பங்கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு, அதிதாகம் தீரும். சிறுநீர்ச் சர்க்கரையும் (Urine sugar) தீரும்.

 கட்டுக்கொடி இலையை    சூரணமாக்கியும் சாப்பிடலாம்.

 4. கட்டுக் கொடி இலை அரை எலுமிச்சை அளவு அரைத்து எருமைத் தயிருடன் கொடுக்க பெரும்பாடு தீரும்.

 5. கட்டுக்கொடி   இலையுடன் மாம்பருப்பும் சமன் அரைத்து பால், சர்க்கரை  சேர்த்து காலை, மாலை கொடுக்கபேதி தீரும். கஞ்சி ஆகாரம் மட்டும் கொடுக்கவும்.

 6. சிறுதளவு கட்டுக்கொடி வேரும், ஒரு துண்டு சுக்கு, மிளகுடன் காய்ச்சிக் கொடுக்க வாதவலி, வாத நோய், கீல் நோய் தீரும்.

 7. கட்டுக்கொடி இலைச்சாற்றை சர்க்கரை கலந்து நீரில் வைத்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதை அதிகாலையில் சாப்பிட்டுவர வெள்ளை, வெட்டை, சீதக் கழிச்சல் ஆகியவை தீரும்.

 8. கட்டுக்கொடி வேரையும், கழற்சிப் பருப்பையும் இழைத்து விழுதாக்கிக் கலந்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு வரும் வயிற்றுவலி தீரும்.

9. மாதவிலக்கின்போது அதிக உதிரப்போக்கு, சிறுநீரில் ரத்தம் கலந்து போகுதல், சீதபேதி, வெள்ளைப்போக்கு பிரச்சினைகளுக்கு கட்டுக்கொடி, துத்தி செடியை பயன்படுத்தி தீர்வு காணலாம்

10. கட்டுக்கொடி இரத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
கட்டுக்கொடியை பயன்படுத்தி மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். கட்டுகொடி இலைகள் 10 எடுத்துக் கொள்ளவும். இதை துண்டுகளாக்கி தண்ணீரில் போடவும். இலைகளை கைகளால் நன்றாக பிசையவும். இலைசாறு தண்ணீரில் கலந்து விடும். பின்னர், இலை சக்கையை மட்டும் எடுத்துவிட்டு தண்ணீரை அரை மணிநேரம் வைத்திருந்தால் ஜெல்லி போன்று மாறும்.
ஒரு ஸ்பூன் அளவுக்கு கட்டுக்கொடி இலையை பொடி செய்து எடுத்து காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிட்டு வர அதிகப்படியான உதிரப்போக்கு கட்டுக்குள் வரும்.  

11. வாத நோயை குணப்படுத்த: சுக்கு, மிளகு, கட்டுக்கொடி இலை ஆகியவற்றை காய்ச்சி குடித்து வந்தால் வாத நோய் குறையும்.

12. Spermatorrhea மற்றும் premature ejaculation எனப்படும் விந்து முந்துதலை குணப்படுத்தவும் மற்றும் நீர்த்த விந்துவை கெட்டிப்படுத்தவும் உலகமெங்கும் பரவலாக கட்டுக்கொடி உபயோகப் படுத்தப்படுகிறது

13. மேற்கண்ட பிரச்சினைகள் சிறுநீரகம் சம்பந்தப்பட்டவை, கட்டுக்கொடி சிறுநீரக பாதையை முழுவதுமாக சீர் செய்வதன் மூலம் மேற்கண்ட பிரச்சினைகளை சரி செய்கிறது.

14. இந்த இலைகளின் குளிர்ச்சி தன்மை காரணமாக பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை, வெட்டை நோய்களை குணப்படுத்துகிறது.

15. பால்வினை நோய்களை குணப்படுத்தவும், மற்றும் ஆண் பெண் இரு பாலாருக்குமான பாலுறுப்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கட்டுக்கொடி மருந்தாகிறது

16. நாள்பட்ட Rheumatoid arthritis நோயை குணப்படுத்த உதவுகிறது.

17. உடைந்த எலும்புகளை சீராக்குவதிலும் மற்றும் Bone Dislocation ஆகிய பிரச்சினைகளிலும் உள்ளுக்குள் சாப்பிடும் மருந்தாக பயன்படுகிறது

18. விஷக்கடிகளில் விஷத்தை எடுக்கவும் மற்றும் எரிச்சலை குறைக்கவும் வெளிப்புற மருந்தாக பயன்படுகிறது.

19. உயர்ந்த இரத்த அழுத்தத்தை குறைத்து தூக்கமின்மையை போக்குகிறது.

20. நரித்தலை வாதம் (Gout), தலைவலி மற்றும் நரம்புகளில் வலி மற்றும் ஒரு தலை வலி (Migrane) குணப்படுத்துவதில் உதவி செய்கிறது

கட்டுக்கொடி இலை மற்றும் வேர்பகுதி ஆகிய இரண்டு மட்டுமே மருத்துவ குணமுடையது. ஆனால் வியாபார ரீதியில் கட்டுக்கொடி இலைப்பொடியை தயாரிக்கும்போது அளவு கூடி வருவதற்காக தண்டு பகுதியினையும் அரைத்து கலந்து கொடுக்கும்போதும் மற்றும் இலையை அரைக்கும் இயந்திரங்களில் கொடுத்து சூடாகுமாறு அரைக்கும்போதும் அதனுடைய மருத்துவத் தன்மை குறைந்து விடுகிறது
 

எங்களிடம் கட்டுக்கொடி இலைகளாகவே கிடைக்கும், அல்லது காய வைத்த இலைகளாகவும், கட்டுக்கொடியை முறைப்படி சூரணம் செய்தும் கிடைக்கும்.
 
  இதை நீங்கள் வாங்கி வீட்டிலேயே சூடாகாமல் அரைத்து பயன்படுத்தும்போது கட்டுக்கொடியின் முழு மருத்துவ பயன்களையும் அடைய முடியும்.
 
இப்போது கட்டுக்கொடி இலைகள் உங்கள் தேவைக்கேற்ப 3 விதமாக கிடைக்கிறது.
1. பச்சை இலைகளாக
2. காய்ந்த இலைகளாக
3. கட்டுக்கொடி சூரணமாக
 

கட்டுக்கொடி இலை தேவைக்கு:
Need Cocculus Hirsutus, Contact:
 
K7 Herbo Care,
13/A, New Mahalipatti Road,
Madurai-1.
Call & Whatsapp: +91 9629457147
Call 2: +91 9025047147 

நல்ல விஷயங்களை பகிர்வோம், அனைவருக்கும் ஆரோக்கியம் அளிப்போம் 






சீந்தில் – (சர்க்கரை நோய்க்கான அருமருந்து)

ஆரோக்கியம் தந்து வாழ்நாளை நீட்டிப்பது, நீண்ட ஆயுளோடு வசீகரத்தையும் விருத்தி செய்யக்கூடியது அமிர்தம் ஆகும். அந்த அமிர்தத்தின் மகத்துவங்கள் அத்தனையையும் ஒரு மூலிகைக் கொடியிலேயே நமக்குக் கிடைக்க வேண்டும் என்றுதான் இறைவன் சீந்தில் கொடியைப் படைத்துள்ளான். அதனால்தான் சீந்தில் கொடியை அமிர்தக்கொடி, அமிர்தவல்லி என்கிறார்கள்.

பெரிய மரங்களைப் பற்றிப் படரக்கூடிய இந்த சீந்தில் கொடி, வேப்ப மரத்தின் மேல் படர்ந்திருந்தால் சிறந்த மருத்துவ குணங்களைப் பெற்றிருக்கும் என மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. Tinospora cordifolia என்பது சீந்திலின் தாவரப் பெயர். Menispermaceae எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இதை ஆயுர்வேத நூல்களில் அம்ரிதா, சின்னரூஹா, மதுபானி, தந்திரிகா, குண்டலினி என்கிற பெயரால் குறிப்பிடுகிறார்கள். 

இலை, தண்டு, வேர் அனைத்தும் மருந்தாகிப் பயன்தரக்கூடிய குணம் கொண்டது சீந்தில். செரிமானமின்மை, வலி, சோர்வு ஆகியவற்றை குணமாக்கும் தன்மையுடையது. தாது விருத்தியை உண்டாக்கக்கூடியது. விட்டுவிட்டு வந்து துன்பம் செய்யும் காய்ச்சலைத் தீர்க்கக் கூடியது. வீக்கத்தைக் கரைக்கக்கூடியது. மூட்டு வலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடியது. ரத்தத்தின் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தக் கூடியது. கல்லீரலைப் பலப்படுத்தக் கூடியது. உடல் தேற்றியாக விளங்குவது. காம உணர்வைத் தூண்டக் கூடியது.
வயிற்றுக் கோளாறுகளை வேரறுக்கக் கூடியது என எண்ணற்ற மருத்துவப் பலன்களைக் கொண்டது சீந்தில் கொடி. சீந்தில் கொடித் தீநீர் வாத சுரத்தையும், பித்த சுரத்தையும் தணிக்கும் வல்லமை கொண்டது. சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மாவு (சீந்தில் சர்க்கரை) வயிற்றில் சேர்கிற அமிலத் தன்மையினைப் போக்கக் கூடியது. வயிற்றுப்போக்கை வற்றச் செய்வது. சீதபேதியைக் குணப்படுத்தக்கூடியது.

ஆயுர்வேத மருத்துவ நூல்கள் உலர்ந்த சீந்திலை மஞ்சள் காமாலையை குணமாக்கவும், ரத்த சோகையைப் போக்கவும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கவும், சரும நோய்களை குணமாக்கவும் பரிந்துரை செய்கிறது.

‘மேகமெனு மாதபத்தால் வெந்த வுயிர்ப்பயிரைத்
தாக மடங்கத் தணித்தலால் - ஆகம்
அமர ரெனலிருக்க வாதரித்த லாலே
அமுதவல்லி சஞ்சீவி யாம்.’ -  என்கிறது 
சித்தர் பாடலான தேரன் வெண்பா.

நீரிழிவு என்றும் மதுமேகம் என்றும் சொல்லப்படுகிற சர்க்கரை நோயால் ஏற்பட்ட வாட்டத்தை வெயிலால் வெந்து வாடிய பயிரை உயிர் கொடுத்துக் காத்த மழைபோல போக்கக் கூடியது சீந்தில். நாவறட்சியையும் உடற்சூட்டையும் போக்கக் கூடியது, ஆரோக்கியமுடன் வாழவும் தீராத நோய்களை தீர்த்து வைக்கவும் உதவக்கூடிய சஞ்சீவி மூலிகை சீந்தில் என்பது மேற்கண்ட பாடலின் பொருள் ஆகும்.

மேலும் இன்னொரு பாடலில், 
‘அமுதவல் லிக்கொடி யக்கார முண்டிடத்
திமிருறு மேகநோய்த் தீபெலா மாறுமே.’
- என்றும் குறிப்பிட்டிருக்கிறார்  தேரையர். 

அமிர்தவல்லி எனும் சீந்தில் கொடியிலிருந்து எடுக்கப்படும் சீந்தில் சர்க்கரையை உண்டு வந்தால் கை, கால்கள் மரத்துப் போவது போன்ற சின்ன பிரச்னைகள் முதல் பால்வினை நோயினால் ஏற்பட்ட துன்பங்கள் வரை விடுதலை கிடைக்கும். இன்னொரு பாடலில் சீந்தில் கொடியின் சர்க்கரையால் பதினெட்டு வகையான சரும நோய்களை போக்க முடியும் என்கிறார்.

சீந்தில் மருந்தாகிப் பயன்தரும் விதம்

சீந்தில் கொடியிலிருந்து இலைகளைப் பிரித்து நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். உலர்ந்த இலைகளைப் பொடித்து வைத்துக்கொண்டு நீரில் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை இரண்டு வேளையும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

சீந்தில்  தண்டுகளைக் காய வைத்து ஒரு தேக்கரண்டி பொடியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை நான்கு டம்ளர் நீர் விட்டு காய்ச்ச வேண்டும். ஒரு டம்ளர் அளவாக சுண்டிய பிறகு காலையில் வெறும் வயிற்றில் குடித்து  வந்தால் பசியின்மை, வயிற்றுவலி, செரிமானமின்மை ஆகிய துன்பங்கள் விலகும். காய்ச்சலுக்கும் இது நல்ல மருந்து. 

சீந்தில் சர்க்கரை தயார் செய்யும் விதம்:
சீந்தில் கொடியை இடித்து குளிர்ந்த நீர் விட்டு ஊற வைக்க வேண்டும். மறுநாள் நன்றாகக் கடைந்து திப்பியை நீக்கிவிட்டு நீரை மட்டும் வெயிலில் வைத்திருந்தால் நீர் தெளிந்துவரும். அந்த தெளிந்த நீரை வடிகட்டிவிட்டு புதிதாக தண்ணீர் சேர்த்து கலக்கி வெயிலில் சுண்ட வைக்க வேண்டும். இப்படி பலமுறை செய்வதால் வெண்மையான மாவு போன்ற பொருள் நமக்குக் கிடைக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப்படும். 

இந்த சீந்தில் சர்க்கரையை ஒரு கிராம் முதல் நான்கு கிராம் வரையில் வாயிலிட்டு நீர் அருந்துவதால் கடும் ஜுரத்துக்கு பின் ஏற்படும் உடல் இளைப்பு, மண்ணீரல் வீக்கம், இருமல், மூர்ச்சை, வாந்தி, ஆஸ்துமா ஆகியன குணமாகும். மேலும் இதனால் நாட்பட்ட சிறுநீர்ப்பை நோய்களுக்கும் தீர்வு கிடைக்கும். தாய்ப்பாலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தவும் உதவுகிறது. கல்லீரல், மண்ணீரல் ஆகியவை சீந்தில் சர்க்கரை சாப்பிட உறுதியாகும். உடல் எடை, உறுதி அதிகமாகும்.  பிற மருந்துகளுடன் சீந்தில் சர்க்கரை சிறிதளவு சேர்த்துக் கொடுக்க பலவகையான நோய்களும் விரைவில் குணமாகும்.


எந்த சிரமுமின்றி வீடுகளில் வளரக் கூடிய சீந்தில் எனும் அமிர்தத்தை நாமும் பயன்படுத்திக் கொள்வோம்!

சீந்தில் சர்க்கரை தேவைக்கு: 
 
K7 Herbo Care,
13/A, New Mahalipatti Road,
Madurai-1.
Call & Whatsapp: +91 9629457147
Call 2: +91 9025047147 

 
 

 



 
Keywords:

கட்டுக்கொடி இலை, கட்டுக்கொடி பொடி, கட்டுக்கொடி சூரணம், கட்டுக்கொடி பயன்கள், கட்டுக்கொடி மருத்துவம், கட்டுக்கொடி மருத்துவ பயன்கள், கட்டுக்கொடி செடி, கட்டுக்கொடி வேர், kattukodi, kattukodi leaf, kattukodi powder, kattukodi in English, kattukodi plant, kattukodi powder benefits in tamil, kattukodi mooligai tamil, kattukodi uses in tamil, kattukodi mooligai, kattukodi botanical name,   premature ejaculation treatment, premature ejaculation ayurvedic medicine, premature ejaculation tablet, premature ejaculation foods in tamil, premature ejaculation pills, rheumatoid arthritis in tamil, rheumatoid arthritis symptoms, rheumatoid arthritis treatment,  gout meaning in tamil, gout meaning, gout attack meaning in tamil, gout treatment in tamil, கவுட், கவுட் உணவு, கவுட் மருத்துவம், கவுட் நோய், கவுட் in English, கவுட் ஆர்த்ரைட்டிஸ், migraine meaning in tamil, migraine headache, migraine treatment, migraine medicine, migraine headache remedy, மைக்ரேன் தலைவலி அறிகுறி, மைக்ரேன் தலைவலி சித்த மருத்துவம், மைக்ரேன் தலைவலி மருத்துவம், மைக்ரேன் தலைவலி, menstrutation, Shorter duration of menstruation, short duration of menstrual cycle, why is my period duration getting shorter, why is the length of my period getting shorter, மாதவிலக்கு வலி குறைய, மாதவிலக்கு சீராக வர, மாதவிலக்கு கோளாறுகள், மாதவிலக்கு காரணங்கள், வலியுடன் கொண்ட மாதவிலக்கு, herbal for premature ejaculation, cures for premature ejaculation, remedies for premature ejaculation and erectile dysfunction, herbal for early ejaculation, herbal cure for premature ejaculation, herbal medicine for premature ejaculation in uae, top 5 herbal medicine for premature ejaculation



Popular posts from this blog

Kattukodi